விளையாட்டு அமைப்புகளுக்கு இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சின் ரிங்கிட் 1 கோடி சிறப்பு ஒதுக்கீடு

விளையாட்டு அமைப்புகளுக்கு இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சின் ரிங்கிட் 1 கோடி சிறப்பு ஒதுக்கீடு

கோலாலும்பூர், ஜூன் 18: கோவிட்-19 பெருந்தொற்று நோயின் தாக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ள தேசிய விளையாட்டு அமைப்புகளுக்கு இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சு ‘பிரிஹாதின் சுக்கான் 2020’ திட்டத்தின் கீழ் ரிங்கிட் 1 கோடி சிறப்பு மானியத்தினை ஒதுக்கியுள்ளது.

இதுக்குறித்து விளக்கமளித்த இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ரீசால் மெரிக்கான் நைனா மெரிக்கான், தேசிய விளையாட்டு ஆணையத்தின் கீழ் பதிவுப்பெற்றுள்ள அமைப்புகளுக்கு நிர்வாக நிதியாக ரிங்கிட் 20 லட்சம், விளையாட்டு நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்த ரிங்கிட் 50 லட்சம், அமைப்புகளின் இலக்கவியல், ஆராய்ச்சி, மேம்பாட்டு திட்டங்களுக்கு 30 இலட்சம் என மொத்தம் ரிங்கிட் 1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

ஏறத்தாழ 200 தேசிய விளையாட்டு அமைப்புகள் நிர்வாக நிதியாக தலா ரிங்கிட் 5,000 முதல் 10,000 வரை  பெறவுள்ளன.

அதே வேளையில், தேசிய விளையாட்டு ஆணையத்தின் கீழ் பதிவுப்பெற்றுள்ள அனைத்து நிலை விளையாட்டு அமைப்புகளும் விளையாட்டு நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்த இச்சிறப்பு நிதிக்கு மனு செய்யலாம். தகுதி பெறும் அமைப்புகளுக்கு உச்ச வரம்பாக ரிங்கிட் 20,000 வரை நிதி வழங்கப்படும்.

விளையாட்டு அமைப்புகளின் புத்தாக்க நடவடிக்கைகளுக்கான இலக்கவியல், ஆராய்ச்சி, மேம்பாட்டு திட்டங்களுக்கு உச்ச வரம்பாக ரிங்கிட் 30,000 வரை நிதி வழங்கப்படும்.

நிபந்தனைகளுக்குட்பட்ட விளையாட்டு அமைப்புகள் இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் வாயிலாக (http://www.kbs.gov.my/inisiatifprihatinsukan2020.html ) ‘பிரிஹாதின் சுக்கான் 2020’ உதவி நிதிக்கு விண்ணப்பம் செய்யலாம்.

Google+ Linkedin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

*