தமிழகத்தில் கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

தமிழகத்தில் கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை, ஜூன் 30 –  தமிழகத்தில் கொவிட்19 பெருந்தொற்றின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஜூன் மாதத்தில் மிகவும் அதிகமாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 17-ஆம் தேதியில் இருந்து 24-ஆம் தேதி வரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  தினந்தோறும் இரண்டாயிரமாக இருந்தவேளையில், 25-ஆம் தேதிக்குப் பிறகு அது மூவாயிரத்தை தாண்டியதாக கூறப்படுகிறது. 

இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று திங்கட்கிழமை மட்டும் 3,949 பேருக்கு கொவிட்19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனால் மொத்த எண்ணிக்கை 86,224 ஆக உயர்ந்துள்ளது. இன்று 2,212 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், மொத்தமாக  47,749 பேர் இந்த பெருந்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

அதேவேளையில்,  62 பேர் (18 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள்) உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 1,141 ஆக அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. 

–பெர்னாமா 

Google+ Linkedin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

*