நேசா கூட்டுறவு கழகத் தலைவராக டத்தோ சசிகுமார் மீண்டும் தேர்வு; உறுப்பினர்களுக்கு 7.5% இலாப ஈவு

நேசா கூட்டுறவு கழகத் தலைவராக டத்தோ சசிகுமார் மீண்டும் தேர்வு; உறுப்பினர்களுக்கு 7.5% இலாப ஈவு

புத்ராஜெயா, டிசம்பர் 28: நேற்று புத்ராஜெயா மெரியோட் விடுதியில் நடைப்பெற்ற நேசா கூட்டுறவு கழகத்தின் 35-வது தேசிய பேராளர் மாநாட்டில் நடப்புத் தலைவர் டத்தோ ப. சசிகுமார் தலைமையிலான அணியினர் பேராளர்களின் ஏகோபித்த ஆதரவுடன் பெரும்பான்மை வாக்குகளில் வாரிய இயக்குனர்களாக தேர்வுப் பெற்றனர். இதன்வழி டத்தோ சசிகுமார் நேசா கூட்டுறவு கழகத் தலைவராக மீண்டும் தலைமையேற்று வழிநடத்தவுள்ளார்.

வாரியத்தின் ஐந்து இயக்குனர்களுக்கான தேர்வில் பத்து பேராளர்கள் போட்டியிட்ட வேளையில், டத்தோ சசிகுமாருடன் அவரது அணியில் இடம்பெற்ற சி. வைரபெருமாள், ஆ. கோவிந்தராஜூ, டத்தோ ந. வெள்ளையன் மற்றும் மு. குள்ளப்பன் ஆகியோர் மகத்தான வெற்றியினை பதிவு செய்தனர்.

“நாடு முழுமையுமுள்ள உறுப்பினர்கள், பேராளர்கள் எனது தலைமைத்துவத்திற்கு வழங்கியுள்ள மகத்தான ஆதரவிற்கு நான் தலை வணங்குகிறேன். நமது கூட்டுறவு கழகத்தினை தொடர்ந்து முன்னேற்ற பாதையில் வழிநடத்த உறுப்பினர்கள் வழங்கும் அங்கீகாரமாக இதனை கருதுகிறேன்.”

“உறுப்பினர்களுக்கு அதிகமான இலாப ஈவினை வழங்கும் வகையில் தொடர்ந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். மக்களுக்கு பயன் தரும் புதிய திட்டங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறோம். சமுதாயத்தின் பொருளாதார உருமாற்றமே நேசா கூட்டுறவு கழகத்தின் இலக்கு!” என டத்தோ சசிகுமார் உறுதி கூறினார்.

நாட்டின் இந்தியர் சார் கூட்டுறவு கழகங்களில் நீண்ட வரலாற்றினையும், சிறப்பான நடவடிக்கைகளையும் கொண்டதாக நேசா கூட்டுறவு கழகம் விளங்குகின்றது. ம.இ.காவின் முன்னாள் தேசியத் தலைவர் டான் ஸ்ரீ மாணிக்கவாசகம் அவர்களின் சீரிய சிந்தனையில் 1974-ஆம் ஆண்டு நேசா கூட்டுறவு கழகம் தோற்றுவிக்கப்பட்டது. டான் ஸ்ரீ மாணிக்கவாசகம் மறைவிற்கு பிறகு நேசா தலைவராக பொறுப்பேற்ற ம.இ.கா முன்னாள் தேசியத் துணைத்தலைவர் டான் ஸ்ரீ சி. சுப்ரமணியம் கழகத்தினை மேலும் வலுப்படுத்தினார்.

அவர்களின் பாதையில், இளைஞர் டத்தோ சசிகுமார் பழனியப்பன் அவர்கள் உறுப்பினர்களின் மேன்மைக்காக பல்வேறு ஆக்கக்கரமான திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். அவரின் தலைமையில் இன்றைய நேசா கூட்டுறவுக் கழக வாரியம் அனுபவமிகு மூத்த உறுப்பினர்களையும், எழுச்சிமிகு இளைய உறுப்பினர்களையும் இயக்குனர்களாக கொண்டுள்ளது.

இன்றைய மாநாட்டில், கூட்டுறவு கழக உறுப்பினர்களுக்கு 7.5% இலாப ஈவு அறிவிக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 காரணமாக நாடு பொருளாதாரத் தாக்கங்களை எதிர்நோக்கியிருப்பினும், நேசாவின் விவேக நடவடிக்கைகளின் வாயிலாக இந்த இலாப ஈவு சாத்தியமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Google+ Linkedin

1 Comment

  • அண்ணாவி

    நேசாவில் நிலங்கள் உண்டா அதாவது தொடீடங்கள்இருகிரதா விவரங்கள் வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

*