அமெரிக்காவில் Covid-19 தாக்கம் இன்னும் மோசமடையும் – ஜோ பைடன்

அமெரிக்காவில் Covid-19 தாக்கம் இன்னும் மோசமடையும் – ஜோ பைடன்

கொவிட்-19 நோயிலிருந்து விடுபடுவதற்கு முன்னர் அமெரிக்காவில் அந்நோயின் தாக்கம் இன்னும் மோசமடையும் என்று அந்நாட்டின் அதிபர் ஜோ பைடன் எச்சரித்திருக்கிறார்.

கொவிட்-19 நோயினால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் அமெரிக்காவில், இரண்டு கோடியே 45 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு இந்நோயினால் நான்கு லட்சத்து 9,987 பேர் மரணமடைந்திருக்கின்றனர்.

இந்நிலையில், முறையான செயல்முறையும் போதுமான நிதியும் இல்லாமல் முன்னாள் அதிபர் டொனல்ட் டிரம்பின் அரசாங்கம் தடுப்பூசியை விநியோகித்தது, நிலைத்தன்மை இல்லா சூழ்நிலையை உருவாக்கி இருப்பதாகவும் பைடன் தெரிவித்திருக்கிறார். – பெர்னாமா 

Google+ Linkedin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

*