நேசா கூட்டுறவு கழகத்தின் தாமான் நேசா டெலிமா வீடமைப்புத் திட்டம், சிறந்த முதலீட்டு வாய்ப்பினை தவற விடாதீர்!

நேசா கூட்டுறவு கழகத்தின் தாமான் நேசா டெலிமா வீடமைப்புத் திட்டம், சிறந்த முதலீட்டு வாய்ப்பினை தவற விடாதீர்!

கோலாலும்பூர், ஏப்ரல் 8: சிரம்பான் அருகே, ரந்தாவ் பகுதியில் நேசா கூட்டுறவு கழகம் மேம்படுத்தி வரும் தாமான் நேசா டெலிமா வீடமைப்புத் திட்டம் அனைத்து வசதிகளையும் ஒருங்கிணைத்த ஒரு சிறந்த முதலீட்டு வாய்ப்பாக அமைகின்றது என கூட்டுறவு கழகத்தின் நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

“தாமான் நேசா டெலிமா சிரம்பான் நகரிலிருந்து 15 நிமிட தொலைவில் அமைந்துள்ளது. செமி-டி மற்றும் பங்களா வகையிலான மொத்தம் 68 வீடுகள் இங்கே நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. விசாலமான வீடுகள், தரமான கட்டுமானப் பணி மற்றும் பொருட்கள், சுற்றிலும் பொது வசதிகள், பாதுகாப்பான இடம், நியாயமான விலை என அனைத்தினையும் உள்ளடக்கிய திட்டமாக இது அமைகின்றது. சொந்த வீட்டினை வாங்கி குடியேற விரும்புவோருக்கும், வீடுகளில் முதலீடு செய்து நீண்ட கால வருவாய் பெற விரும்புவோருக்கும் இவ்வீடமைப்புத் திட்டம் ஒரு அரிய வாய்ப்பாகும்,” என நேசா கூட்டுறவு கழகத்தின் தலைவர் டத்தோ சசிகுமார் பழனியப்பன் கூறினார்.

8,000-கும் அதிகமான உறுப்பினர்களுடன் செயல்படும் நேசா கூட்டுறவு கழகம், தமது உறுப்பினர்களின் வளர்ச்சிக்காக பல்வேறு ஆக்ககரமான திட்டங்களை நிறைவேற்றி வருகின்றது. டான் ஸ்ரீ மாணிக்கவாசகம் அவர்களின் சீரிய சிந்தனையில் மலேசிய இந்தியர்களின் பொருளாதாரத்தினை வளப்படுத்தி, சொத்துடமை கொண்ட சமுதாயமாக உருமாற்றம் காணும் நோக்கில் 1974-ஆம் ஆண்டு நேசா கூட்டுறவு கழகம் தோற்றுவிக்கப்பட்டது. தொடர்ந்து டான் ஸ்ரீ சி. சுப்ரமணியம் தலைமையில் உறுப்பினர்களின் சேமிப்பு பலப்படுத்தப்பட்டு, நாடுத் தழுவிய ரீதியில் நேசா பல்வேறு விவசாயம் மற்றும் மேம்பாட்டு நிலங்களை வாங்கி சொத்துடமையை வலுப்படுத்தியது.

“இன்று மலேசிய கூட்டுறவு கழக இலாகா அறிவித்துள்ள நாட்டின் தலைச்சிறந்த 100 கூட்டுறவுக் கழகங்களில் நேசாவும் இடம்பெற்றிருப்பது நமக்கு கிடைத்துள்ள மாபெரும் அங்கீகாரமாகும். நாடு முழுமையும் உள்ள நேசாவின் சொத்துடமைகள் முறையான வருமானத்தினை ஈட்டும் வகையில் மேம்படுத்தப்பட்டு, உறுப்பினர்களுக்கு அதிகமான இலாப ஈவினை வழங்கும் நோக்கில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். நமது சமுதாயத்தின் பொருளாதார உருமாற்றமே எனது தலைமையிலான நேசா கூட்டுறவு கழகத்தின் இலக்கு!” என டத்தோ சசிகுமார் மேலும் கூறினார்.

தாமான் நேசா டெலிமா வீடமைப்புத் திட்டத்தின் மாதிரி வீடு இவ்வாரம் சனிக்கிழமை, ஏப்ரல் 10 அன்று காலை மணி 10 முதல் நண்பகல் 12 வரை மலேசிய கூட்டுறவு கழக ஆணைய உதவி தலைவர் டத்தோ உமார் சாரிம் பின் சைடின் அவர்களால் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது. கழக உறுப்பினர்களும், பொதுமக்களும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு மாதிரி வீட்டினை பார்வையிடுவதுடன், வீடுகளுக்கான முன்பதிவினையும் செய்துக் கொள்ளலாம் என டத்தோ சசிகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிகழ்வில் நேசா கூட்டுறவு கழகத்தின் துணைத் தலைவர் டத்தோ இராமு, செயலாளர் திரு ஆதிநாராயணன் ராவ் PJK மற்றும் வாரியக்குழு உறுப்பினர்களுடன் மற்ற பிரமுகர்களும் கலந்துக்கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

தாமான் நேசா டெலிமா வீடமைப்புத் திட்டம் மற்றும் அதன் மாதிரி வீடு திறப்பு விழா குறித்த மேல் விவரங்களுக்கு 017-267 3921 எண்களில் குமாரி வாணீஸ் அவர்களுடன் தொடர்பு கொள்ளலாம்.

Google+ Linkedin

4 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

*