கால்நடை வளர்ப்புத்துறையில் ஈடுப்பட்டுள்ள 200 இந்திய தொழில்முனைவர்களுக்கு மித்ரா வாயிலாக கறவை மாடுகள்

கால்நடை வளர்ப்புத்துறையில் ஈடுப்பட்டுள்ள 200 இந்திய தொழில்முனைவர்களுக்கு மித்ரா வாயிலாக கறவை மாடுகள்

மெர்சிங், ஆகஸ்டு 2:  ஒற்றுமைத்துறை அமைச்சின் கீழ் செயல்படும் இந்தியர் உருமாற்ற இலாகா (மித்ரா) திட்டத்தின் கீழ் சிறிய அளவில் மாட்டுப்பண்ணை வைத்திருக்கும் சுமார் 200 இந்திய தொழில்முனைவர்களுக்கு ஒரு ஜோடி கறவை மாடு வழங்கும் திட்டம் நேற்று மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் அவர்களின் முன்னிலையில்  ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோ ஹலிமா சாடிக் அவர்களால் தொடக்கி வைக்கப்பட்டது.

மித்ரா, விவசாய அமைச்சின் கால்நடை வளர்ப்பு சேவை இலாகா மற்றும் காம்ரான் செண்டிரியான் பெர்ஹாட் நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகின்றது.

“மித்ராவின் இந்திய சமுதாயப் பொருளியல், பொருளாதார மேம்பாடு கொள்கையின் கீழ் ஏறத்தாழ ரிங்கிட் 5 மில்லியன் மதிப்பிலான இத்திட்டத்தின் வாயிலாக நாடு முழுமையும் உள்ள 200 கால்நடை தொழில்முனைவர்களுக்கு தலா 2 சினைப் பருவத்தில் உள்ள கறவை மாடுகள் வழங்கப்படுகின்றன. இவை  விரைவில் கன்றுகளை ஈன்றும் சூழ்நிலையில், அனைவரும் 4 மாடுகளைப் பெற்றிருப்பர்.”

“கால்நடை வளர்ப்புத்துறையில் அனுபவம் கொண்டு, கால்நடை வளர்ப்பு சேவை இலாகாவில் பதிவுப்பெற்று விவரங்கள் உறுதிப்படுத்தப்பட்ட இந்திய தொழில்முனைவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுகின்றது,” என சரவணன் விளக்கம் அளித்தார்.

இந்த திட்டம் பங்கேற்பாளர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு வித்திடும் அதே வேளையில், நாட்டின் விவசாய கொள்கைக்கு ஏற்ப மாட்டுப்பால் உற்பத்தி பெருக்கத்திற்கும் கணிசமான அளவில் பங்களிக்கும் என சரவணன் நம்பிக்கை தெரிவித்தார்.  

Google+ Linkedin

1 Comment

  • Gobinath a/l chandiram

    Saya adalah oku…..tolonglah kerajaan kepada kami sebab kami pun nak maju

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

*